சுற்றுலா வாகனங்களுக்கான உரிமம் தமிழக போக்குவரத்து துறையின் முடிவில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சுற்றுலா வாகனத்துக்கான அகில இந்திய உரிமத்தை நீட்டிக்கக் கோரி கே.ஜெயா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், 2017ல் பெறப்பட்ட சுற்றுலா வாகனத்துக்கான உரிமத்தை 2024 வரை 8 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்த முடியும் என தமிழக போக்குவரத்துத்துறை நிபந்தனை விதித்தது. மத்திய மோட்டார் வாகன விதிப்படி சுற்றுலா வாகனம் உரிமத்தை 12 ஆண்டுகள் வரை வாகனத்தை பயன்படுத்தலாம்.

டீசல் வாகனமாக இருந்தால் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. சுற்றுலா வாகனத்தை 8 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு விதிகளில் தெரிவிக்கவில்லலை. அதனால், தங்களின் உரிமத்தை நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹாஜா நசிருதீன், மாநில கட்டுப்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு மாநில அரசு மட்டுமே உரிமம் வழங்க முடியும்.

வாகனங்களின் ஆயுட் காலத்தை கருத்தில் கொண்டு 8 ஆண்டுகளுக்குள் வாகனத்தை மாற்ற வேண்டும் என உரிமம் வழங்கப்படுகிறது. என தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி சத்ய நாராயண பிரசாத், சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுட்காலம் 8 ஆண்டுகள் என மாநில அரசு நிர்ணயித்துள்ள முடிவில் தலையிட முடியாது. உரிமம் புதுப்பிக்க மத்திய போக்குவரத்து விதிகளின் படி பணம் செலுத்தியிருந்தால், அதற்கு மாநில அரசு எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்க தேவையில்லை என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

The post சுற்றுலா வாகனங்களுக்கான உரிமம் தமிழக போக்குவரத்து துறையின் முடிவில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: