போடி, ஏப்.29: போடி பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் போடி புறநகர் காவல் நிலை ய எஸ்.ஐ மணிகண்டன் அந்த பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போது, ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் கிழக்கு தெருவை சேர்ந்த சுரேஷ்(39) என்பவர் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அவரிடம் இருந்து 8 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தார். இதேபோல, போடி அருகே மீனாட்சிபுரம், காந்தி மெயின் ரோட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக, ஆண்டிபட்டி அருகே கோவில்பட்டி காலனி தெருவை சேர்ந்த வீரன்(41) என்பவரை போலீசார் கைதுசெய்து, அவரிடம் இருந்து 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
The post போடியில் மது பாட்டில் பதுக்கல் இருவர் கைது appeared first on Dinakaran.
