டெல்லி: தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கான ஒன்றிய அரசின் முயற்சிகளுக்கு தமிழ்நாடு ஆதரவு அளிக்கும் என்று திருச்சி சிவா எம்.பி பேட்டி அளித்துள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்தில், காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்தோம். தீவிரவாத நடவடிக்கைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் தீவிரவாத செயல் இனியும் தொடரக் கூடாது என்றும் வலியுறுத்தினோம்.