ராஜஸ்தான்: இன்று நடைபெற உள்ள தன் திருமணத்துக்கு பாகிஸ்தான் செல்ல முடியாமல் கல்யாண மாப்பிள்ளை தவித்து வருகிறார். ராஜஸ்தானைச் சேர்ந்த ஷைதன் சிங் என்பவரின் திருமணம் பாகிஸ்தானில் இன்று நடைபெற உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையான அட்டாரி சோதனைச் சாவடியை ஒன்றிய அரசு மூடுவதாக அறிவித்துள்ளது. எல்லை மூடப்பட்டுள்ளதால் தன் திருமணத்துக்காக எவ்வாறு பாக். செல்வது என ஷைதன் சிங் குழப்பத்தில் உள்ளார்.