புதுச்சேரி: சென்னை அணி நல்ல அணி, சரியாக ஆடவில்லை, அது உண்மைதான். வரும் போட்டிகளில் நன்றாக ஆடுவார்கள் என நம்பிக்கை உள்ளது என புதுச்சேரியில் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார். புதுச்சேரியில் சூப்பர் கிங்ஸ் அகாடமியின் முதல் பயிற்சி மையம் மூலகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று திறக்கப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்று கிரிக்கெட் அகாடமியை திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை அணி நல்ல அணி. சரியாக ஆடவில்லை என்பது உண்மைதான்.
இன்னும் 6 ஆட்டங்கள் உள்ளது. 2010ம் ஆண்டு இதேபோன்று தோற்றோம். பிறகு தொடர்ந்து வெற்றி பெற்றோம். அணி வீரர்கள் வரும் போட்டிகளில் நன்றாக ஆடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தோல்விக்கு காரணம் ஏதும் இல்லை.
போட்டிகளில் வெற்றி தோல்வி எல்லாம் இருக்கும். ருதுராஜுக்கு அடிபட்டுள்ளதால் அவரால் விளையாட முடியாது. அணியின் ஆலோசகராக இருப்பார். தற்போது தோல்வி அடைந்துள்ளதால் நீங்கள் சோர்வாக இருப்பீர்கள். வெற்றிபெற ஆரம்பித்தால் நீங்கள் உற்சாகமாகி விடுவீர்கள்’. இவ்வாறு அவர் கூறினார்.
The post சென்னை அணி சரியாக ஆடாதது உண்மைதான்; 2010ல் நடந்தது மீண்டும் நடக்கும்: – சிஇஓ காசிவிஸ்வநாதன் நம்பிக்கை appeared first on Dinakaran.