இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி

 

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்திய மகளிர் அணி கைப்பற்றியது. 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டியில் 3-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தனர். பின்னர் விளையாடிய இந்திய மகளிர் அணி 13.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்திய மகளிர் அணியில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 79* ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இந்திய மகளிர் அணியில் அதிகபட்சமாக ரேணுகா சிங் 4, தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்

Related Stories: