அந்த ரயில் ஏற்கனவே காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், நாசரேத், வைகுண்டம், செய்துங்கநல்லூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல நிறுத்தங்களில் நின்று செல்கிறது. அந்த ரயில் இன்று முதல் திருச்சிக்கு அடுத்தாற்போல் பூதலூரில் நின்று செல்லும். தொடர்ந்து வழக்கம்போல் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் உள்ளிட்ட நிறுத்தங்களிலும் நின்று செல்லும். இதுபோல் செங்கோட்டையில் இருந்து நெல்லை வழியாக தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் நாளை முதல் சிதம்பரத்தில் நின்று செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறைக்கு அதிகாலை 12.54 மணிக்கு செல்லும் அந்த ரயில், தொடர்ந்து அதிகாலை 1.30 மணிக்கு சிதம்பரத்தில் இருநிமிடங்கள் நின்று பின்பு திருப்பாதிபுலியூர் புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கமாக தாம்பரம்- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் திருப்பாதி புலியூரில் இருந்து இரவு 11.41 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 12.13 மணிக்கு சிதம்பரம் வந்து சேரும். அங்கு இரு நிமிடங்கள் நின்ற பின்னர் மயிலாடுதுறை செல்லும்.
The post கோடை கால விடுமுறையை முன்னிட்டு நெல்லை வழியாக செல்லும் ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.