பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஏப்.22: திண்டுக்கல்லில் சிஐடியு ஊழியர் சங்கம் சார்பில் டாஸ்மாக் நிறுவனத்தில் 22 ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரம் செய்யக்கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணை தலைவர் மகாமுனி தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர்கள் ராஜாமணி, முனியப்பன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட பொருளாளர் கோபால், மாவட்ட பொதுச் செயலாளர் சீனிவாசன், டாஸ்மாக் சங்க பொறுப்பாளர் பால்ராஜ் வாழ்த்துரை வழங்கினர்.

போராட்டத்தில், தமிழகம் முழுவதும் அரசு டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 22 ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, அரசு ஊழியர்களுக்கு இணையான அனைத்துச் சலுகைகளையும் அறிவிக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களின் பணிவு ஓய்வு வயதை 60ஆக உயர்த்த வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தால் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பணி சுமை பாதிப்புகளை கருத்தில் கொண்டு மாற்றத்திட்டம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாவட்டத் துணைத் தலைவர் ராமு நன்றி கூறினார்.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: