ஐபிஎல்லில் இன்று 2 போட்டிகள்


37வது லீக் போட்டியில் முதலிடத்தை நோக்கி பஞ்சாப் முன்னேற போராடும் பெங்களூரு
* முல்லன்பூரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் ஐபிஎல் தொடரின் 37வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
* நடப்பு தொடரில் இந்த இரு அணிகளுக்கும் இது, 8வது போட்டி.
* பஞ்சாப், பெங்களூரு அணிகள் இதுவரை 34 போட்டிகளில் மோதியுள்ளன.
* அந்த போட்டிகளில் பெங்களூரு,16, பஞ்சாப் 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

* இந்த அணிகள் இடையே நடந்துள்ள போட்டிகளில், அதிகபட்சமாக, பெங்களூரு, 241 ரன்களையும், பஞ்சாப் 232 ரன்களையும் குவித்துள்ளன.
* குறைந்தபட்சமாக, பெங்களூரு 84 ரன், பஞ்சாப் 88 ரன் எடுத்துள்ளன.
* இந்த இரு அணிகள் இடையே நடந்த கடைசி 5 போட்டிகளில், பஞ்சாப் 2 முறையும், பெங்களூரு 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
* நடப்புத் தொடரில், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி, 7 போட்டிகளில் ஆடி 5ல் வெற்றி, 2ல் தோல்வி பெற்று, 10 புள்ளிகளுடன் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.
* இந்த தொடரில் ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி, 7 போட்டிகளில் ஆடி, 4ல் வெற்றி, 3ல் தோல்விகளை பெற்று, 8 புள்ளியுடன் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளது.

38வது லீக் போட்டியில் எழுச்சி வேகத்தில் சென்னை பழி வாங்க துடிக்கும் மும்பை
* மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஐபிஎல் தொடரின் 38வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
* நடப்பு தொடரில் இந்த இரு அணிகளுக்கும், இது 8வது போட்டி.
* மும்பை, சென்னை அணிகள் இதுவரை 38 போட்டிகளில் மோதியுள்ளன.
* அவற்றில் மும்பை 20 போட்டிகளிலும், சென்னை 18 போட்டிகளிலும் வெற்றியை ருசித்துள்ளன.

* அந்த போட்டிகளில் அதிகபட்சமாக, மும்பை 219 ரன், சென்னை 218 ரன் குவித்துள்ளன.
* குறைந்தபட்சமாக, மும்பை 136 ரன், சென்னை 79 ரன் எடுத்துள்ளன.
* இந்த இரு அணிகள் இடையே கடைசியாக நடந்த 5 போட்டிகளில், 4ல் சென்னையும், ஒன்றில் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன. நடப்புத் தொடரில் மும்பையுடன் நடந்த முதல் போட்டியில் சென்னை வெற்றி வாகை சூடியது.
* நடப்புத் தொடரில், மும்பை அணி, 7 போட்டிகளில் ஆடி, 3ல் வெற்றி, 4ல் தோல்வி அடைந்து, 6 புள்ளிகளுடன் பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளது.
* இந்த தொடரில் சென்னை அணி 7 போட்டிகளில் மோதி, 2ல் வெற்றி, 5ல் தோல்வியுடன் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று, புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.

The post ஐபிஎல்லில் இன்று 2 போட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: