இந்த கழிவுநீர் எண்ணெய் பசைபோல் வெளியேறி அந்த பகுதியில் தேங்கி நின்றது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அந்த கழிவுநீரில் வழுக்கி விழுந்தனர். இதேபோல 7 பேர் வழுக்கி விழுந்து காயம் அடைந்தனர்.
இதுகுறித்து அந்த வழியாக சென்ற பொமக்கள் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்கள் அந்த வழியாக செல்லாதவாறு பார்த்துக் கொண்டனர்.
மேலும் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிரம்பி வழிந்த பாதாள சாக்கடை நீரை முழுவதும் அப்புறப்படுத்தினர். மேலும் எண்ணெய் பசைபோல் தேங்கி இருந்த இடத்தில் முழுவதும் மணல் கொட்டி சரி செய்தனர். பாதாள சாக்கடை நீர் வழிந்து ஓடி அதில் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
The post கழிவுநீரில் வழுக்கி விழுந்து 7 பேர் காயம் appeared first on Dinakaran.
