பெங்களூர்-பஞ்சாப் இன்று பலப்பரீட்சை


பெங்களூர், ஏப்.18: ஐபிஎல் போட்டியின் 34வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று டெல்லியில் மோத உள்ளனர்.
* ஐபிஎல் தொடர்களில் இந்த 2 அணிகளும் 33 முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தியுள்ளன.
* அவற்றில் பஞ்சாப் 17, பெங்களூர் 16 ஆட்டங்களில் வெற்றிப் பெற்றுள்ளன.
* இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக பெங்களூர் 241, பஞ்சாப் 232 ரன் விளாசி இருக்கின்றன.

* குறைந்தபட்சமாக பஞ்சாப் 88, பெங்களூர் 84 ரன்னில் சுருண்டுள்ளன.
* இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் 3-2 என்ற கணக்கில் பெங்களூர் முன்னிலையில் உள்ளது.
* மற்ற அணிகளுடன் கடைசியாக விளையாடிய தலா 5 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 3-2 வெற்றி தோல்விகளை வசப்படுத்தி உள்ளன.
* நடப்புத் தொடரில் ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூர் இதுவரை 6 லீக் ஆட்டங்களில் ஆடி நடப்பு சாம்பியன் கொல்கத்தா, முன்னாள் சாம்பியன்கள் (5 முறை) சென்னை, மும்பை, முதல் சாம்பியன் ராஜஸ்தான் ஆகியவற்றை வீழ்த்தி உள்ளது.

* எஞ்சிய 2 ஆட்டங்களில் பெங்களூர் முன்னாள் சாம்பியன் குஜராத், டெல்லி ஆகிய அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. இந்த 2 ஆட்டங்களும் சொந்த களமான பெங்களூரில் நடந்தவை.
* பஞ்சாப் அணி ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் இதுவரை ஆடிய 6 ஆட்டங்களில் 4 ஆட்டங்களில் குஜராத், லக்னோ, சென்னை, கொல்கத்தா வெற்றி வாகை சூடியிருக்கிறது.
* மீதி 2 ஆட்டங்களில் ராஜஸ்தான், ஐதராபாத் அணிகளிடம் தோல்வி அடைந்தது.
* இந்த 2 அணிகளும் இதுவரைவிளையாடி தலா 6 ஆட்டங்களில் தலா 4 வெற்றி, தலா 2 தோல்விகைள சந்தித்துள்ளன.
* இன்று தங்கள் 7வது லீக் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

* இதுவரை கோப்பைையை வெல்லாத இந்த 2 அணிகளும் இந்த முறை கோப்பையை வெல்ல வரிந்துக் கட்டி விளையாடி வருகின்றன.
* கூடவே சொந்த மண்ணில் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க பெங்களூர் தீவிரம் காட்டும்.
* நடப்பு சாம்பியன் கொல்கத்தாவுக்கு எதிரான பஞ்சாப்பின் த்ரில் வெற்றி அந்த அணியின் வேகத்தையும், விவேகத்தையும் வெளிப்படுத்தின.
* பெங்களூர் சின்னசாமி அரங்கில் இந்த 2 அணிகளும் இதுவரை 12 ஆட்டங்களில் பலப்பரீட்சை நடத்தியுள்ளன. அதில் பெங்களூர் 7, பஞ்சாப் 5 ஆட்டங்களில் வெற்றிப் பெற்றுள்ளன.

The post பெங்களூர்-பஞ்சாப் இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Related Stories: