சென்னை: சென்னை அருகே பூந்தமல்லியில் அரசுப்பேருந்து மெட்ரோ ரயில் தூணில் மோதி விபத்துகுள்ளானது. அண்ணா சதுக்கத்திலிருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற 25ஜி அரசுப் பேருந்து குமணன்சாவடி அருகே விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற 25 ஜி அரசு மாநகர பேருந்து குமணன் சாவடி அருகே மெட்ரோ ரயில் தூணின் தடுப்பு சுவரில் மோதி நின்றது.
இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கிய நிலையில் டிரைவர் உட்பட 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். டிரைவர் தூக்க கலக்கத்தில் தடுப்பு சுவற்றில் மோதினாரா அல்லது பேருந்து பழுது ஏற்பட்டு மோதியதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை மேம்பால பாதையாகவும் அமைக்கப்படுகிறது.
பூந்தமல்லி மெட்ரோ நிலையம், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான பாதையில் அமைந்துள்ள ஒரு நிலையமாகும். இந்த நிலையில், பயணிகள் வசதிக்காக அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கும். மேலும், 40 லிப்ட்களும், 60 எஸ்கலேட்டர்களும் நிலையங்களில் பொருத்தப்பட்டு வருகின்றன.
பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரயில் பணிகள் 90% நிறைவு பெற்றுள்ளதாகவும், இதில் பரந்தூர் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 நிலையங்கள் உள்ளன. பூந்தமல்லி மெட்ரோ நிலையம், 9 சுரங்கப்பாதை நிலையங்கள் மற்றும் 18 உயர்மட்ட நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் பூந்தமல்லி சென்ற அரசுப்பேருந்து மெட்ரோ ரயில் தூணில் மோதி விபத்துகுள்ளானது. அண்ணா சதுக்கத்திலிருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற 25ஜி அரசுப் பேருந்து குமணன்சாவடி அருகே விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
The post பூந்தமல்லி அருகே அரசுப்பேருந்து மெட்ரோ ரயில் தூணில் மோதி விபத்து appeared first on Dinakaran.