மக்கள் தொடர்பு முகாமை முன்னிட்டு கும்பிகுளத்தில் ஏப்.23ல் முன்னோடி மனு பெறும் முகாம்

நெல்லை, ஏப். 17: ராதாபுரம் தாலுகா, கும்பிகுளம் கிராமத்தில் நடக்கும் மக்கள் தொடர்பு முகாமை முன்னிட்டு, ஏப்.23ம்தேதி சீலாத்திக்குளம் கிராம சேவை மையத்தில் மனுக்கள் பெறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை கலெக்டர் சுகுமார் கூறியிருப்பதாவது: ராதாபுரம் தாலுகா, கும்பிகுளம் கிராமத்தில் கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் மே 22ம்தேதி நடக்கிறது. எனவே, அதற்கு முன்னோடியாக வருகிற 23ம்தேதி கும்பிகுளம் கிராமம், சீலாத்திக்குளம் கிராம சேவை மையத்தில் வைத்து காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மனுக்கள் பெறப்படுகிறது. முகாமில் சேரன்மகாதேவி ஆர்டிஓ (பொறுப்பு) மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை கலெக்டர் ஜெயா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அன்பழகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசெல்வி ஆகியோர் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படுகிறது. முகாம் நிறைவு பெற்றவுடன் அன்று பிற்பகல் அந்த கிராமத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. எனவே, ஆய்வுக் குழுவிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post மக்கள் தொடர்பு முகாமை முன்னிட்டு கும்பிகுளத்தில் ஏப்.23ல் முன்னோடி மனு பெறும் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: