பெய்ஜிங்: 2025 ஜன.-மார்ச் காலாண்டில் சீனப் பொருளாதாரம் 5.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மார்ச்சில் சீனாவில் ஆலைப் பொருள்களின் உற்பத்தி 7.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக சீனாவின் தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. சில்லறை விற்பனையும் சீனாவில் 5.9 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.