கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த தாசிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் அமர்நாத்(15). அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் இருந்த தேங்காய்களை இரும்பு கொக்கியால் பறிக்கும் முயற்சியில் அமர்நாத் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக சென்ற மின் ஒயர் மீது இரும்பு கொக்கி பட்டுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அமர்நாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
The post இரும்பு கொக்கியால் தேங்காய் பறித்த 10ம் வகுப்பு மாணவன் மின்சாரம் பாய்ந்து பலி appeared first on Dinakaran.