சிங்கப்பூர் நிறுவனத்தில் அதிர்ச்சி: டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம் கொடுத்த ஊழியர்


சிங்கப்பூர்: ஊழியர் ஒருவர் டிஷ்யூ பேப்பரில் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து சிங்கப்பூர் நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் டிஸ்யூ பேப்பரில் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதை ஆஞ்சிலா யோஹ் என்ற பெண் தொழிலதிபர் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு, ஊழியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். வைரலாகி வரும் அந்த ராஜினாமா கடிதத்தில், “நான் தேவைப்படும்போது பயன்படுத்தப்படும் கழிப்பறை காகிதத்தைப் போல உணர்ந்தேன், எந்தவொரு இரண்டாம்பட்ச சிந்தனையைக் கூட இல்லாமல் தூக்கி எறியப்பட்டேன்.

இந்த நிறுவனம் என்னை எவ்வாறு நடத்தியது என்பதற்கான அடையாளமாக தான், இந்த வகையான காகிதத்தை எனது ராஜினாமா கடிதத்தை எழுத தேர்ந்தெடுத்துள்ளேன்” என்று எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பான பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

The post சிங்கப்பூர் நிறுவனத்தில் அதிர்ச்சி: டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம் கொடுத்த ஊழியர் appeared first on Dinakaran.

Related Stories: