ஐபிஎல் 32வது போட்டியில் டெல்லியில் ராஜா ஆகுமா ராஜஸ்தான் ராயல்ஸ்?


* டெல்லியில் இன்று நடைபெறும் ஐபிஎல் 32வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
* இந்த 2 அணிகளும் இது வரை 29 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் 15 போட்டிகளில் முதல் சாம்பியன் ராஜஸ்தானும், 14 போட்டிகளில் டெல்லியும் வென்று உள்ளன.
* இந்த போட்டிகளில் அதிகபட்சமாக ராஜஸ்தான் 222, டெல்லி 221 ரன் எடுத்துள்ளன.
* குறைந்தபட்சமாக ராஜஸ்தான் 115, டெல்லி 60 ரன் மட்டுமே எடுத்துள்ளன.
* இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஐபிஎல் போட்டிகளிலும் ராஜஸ்தான் 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

* ராஜஸ்தான் 2-3 என்ற கணக்கில் வெற்றி தோல்விகளை பெற்று இருக்கிறது.
* நடப்புத் தொடரில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் லக்னோ, ஐதராபாத், சென்னை, பெங்களூர் ஆகிய அணிகளை வீழ்த்தி தொடர்ந்து 4 வெற்றிகளை பெற்று அசத்தியது.
* ஆனால் கடைசியாக மும்பை அணிக்கு எதிராக விளையாடிய ஆட்டத்தில் போராடி தோற்றது.
* சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் நடப்புத் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது.
* அவற்றில் ஐதராபாத், கொல்கத்தா, குஜராத், பெங்களூரு என 4 அணிகளிடம் தோல்வியை பெற்றது. இடையில் சென்னை, பஞ்சாப் அணிகளை வீழ்த்தி இருக்கிறது.
* இந்த தொடரில் இன்றைய லீக் போட்டி, ராஜஸ்தானுக்கு 7வது, டெல்லிக்கு 6வது ஆட்டமாகும்.

The post ஐபிஎல் 32வது போட்டியில் டெல்லியில் ராஜா ஆகுமா ராஜஸ்தான் ராயல்ஸ்? appeared first on Dinakaran.

Related Stories: