மாட்ரிட்: ஸ்பெயினை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் (39) நீண்ட காலமாக வலது கை பெருவிரல் பகுதியில் வலியால் அவதிப்பட்டு வருகிறார். வலது கை பெருவிரலை அசைப்பதில் கடும் சிரமம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்பிரச்னைக்கு தீர்வாக, மருத்துவர் குழு, ரபேல் நடாலின் வலதுகை பெருவிரல் பகுதியில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். கவுரவம் மிக்கதாக கருதப்படும் 22 கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள ரபேல் நடால், இடது கை ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
