17 முறை சாம்பியன்: தோல்வியுடன் ஜான் சீனா ஓய்வு

நியூயார்க்: டபிள்யூ.டபிள்யூ.இ., மல்யுத்த போட்டிகளில் மிகவும் பிரபலமான சாம்பியன் வீரர் ஜான் சீனா, நேற்று அமெரிக்காவில் நடந்த தனது கடைசி மல்யுத்த போட்டியில் விளையாடினார். இப்போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்ததால், மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்திய நேரப்படி நேற்று காலை 6.30 மணிக்கு நடந்த இப்போட்டியில் ஜான் சீனா, கன்தரை எதிர்கொண்டார். டேப் அவுட் முறையில் ஜான் சீனா தோல்வியடைந்தார். அத்துடன் தனது டபிள்யூ.டபிள்யூ.இ., மல்யுத்தத்தை முடித்துக்கொண்டு, சாம்பியன் வீரர்கள், ரசிகர்கள் முன்னிலையில் விடை பெற்றார். 17 முறை சாம்பியன் பட்டம் வென்ற இவரது ஓய்வை ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கொண்டாடி வழியனுப்பி வைத்தனர். ஓய்வு பெற்ற ஜான் சீனா, ஏற்கனவே சில ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

Related Stories: