சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வருகிறார். மாநில பட்டியலில் உள்ளவற்றை பொதுப் பட்டியலுக்கு மடை மாற்றம் செய்யும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. மாநிலங்களின் உரிமைகள் காக்கப்பட்டால்தான் இந்தியா ஒற்றுமையுடன் இருக்கும். இதனை உணர்ந்தே மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை திமுக முன்னெடுத்துள்ளது. மாநில உரிமையை நிலைநாட்டவே ராஜமன்னார் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவை நீர்த்துப் போக செய்யும் வகையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது . நீட் தேர்வு ஒரு சாரருக்கு மட்டுமே பயன்படும். மாநில பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு ஒன்றிய அரசால் மாற்றம் செய்யப்பட்டதால் மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சி. கல்விக் கொள்கையில் தமிழ்நாட்டு மாணவர்கள் நலனை மட்டுமே கருதுகிறது திமுக அரசு என்றும் தெரிவித்தார்.
The post தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தொடர்பாக தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.