ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தில் ஆளுமை மிக்க தலைவர்கள், நீதிபதிகள், ஏராளமான வழக்கறிஞர்கள், மத்திய, மாநில அரசு உயர் அலுவலர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் உருவான, அவர்கள் தங்கி படித்து வெற்றி பெற தாய் மடியாக இருந்த, அவர்கள் அனைவருக்கும் முகவரி கொடுத்த சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா அனைத்து கல்லூரி நவீன மாணவர் விடுதியை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின், உயர்கல்வி கனவினை நனவாக்கும் பொருட்டு, விடுதி வளாகத்தில் 10 தளங்களுடன் 121 அறைகளோடு கூடிய 500 மாணவர்கள் தங்கி பயில நவீன வசதியான நூலகம், பயிலகம், கற்றல் கற்பித்தல் அறை, உடற்பயிற்சி கூடம், உள்ளரங்கு விளையாட்டு கூடம் ஆகியவற்றுடன் கூடிய புதிய நவீன விடுதியை ரூபாய் 44.50 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை, சமத்துவ நாளான சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
The post ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான நவீன விடுதி: முதல்வருக்கு எஸ்சி, எஸ்டி பணியாளர்கள் சங்கம் வரவேற்பு appeared first on Dinakaran.