பழைய ஓய்வூதிய விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் நல்ல அறிவிப்பை நாளை வெளியிட உள்ளார்: போட்டா ஜியோ அமைப்பு

சென்னை: பழைய ஓய்வூதிய விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல அறிவிப்பை நாளை வெளியிட உள்ளார் என போட்டா ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. 23 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்னை நாளை தீர்க்கப்படும் என அமைச்சர்கள் கூறியுள்ளனர். அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர். அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து கோரிக்கை ஏற்கப்பட்டதாக போட்டா ஜியோ அமைப்பு அறிவித்தது.

Related Stories: