மேலும் வழுக்கை தலையில் மொட்டையடிக்க மட்டும் ரூ.200 கொடுத்தால், முடி வளர வைக்கும் மூலிகை கிரீம் ‘இலவசம், இலவசம், இலவசம்’ எனக்கூறினார். இதனால் அவர் கடையில் வரிசைக்கட்டி வந்தவர்களின் தலையை சுத்தமாக ஷேவ் செய்து தான் தயார் செய்ததாக கூறும் கெட்டியான கிரீமை பூசினார். வகில் சல்மானி சொன்னது போல் 8 நாட்கள் பொறுமையாகக் காத்திருந்தனர். 9வது நாள் முடிந்தும் முடி வளரவில்லை. மேலும் வழுக்கைத் தலையில் அரிப்பு, கொப்பளங்கள் வந்ததால் அதிர்ச்சியடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் நாளுக்கு நாள் அதிகமானதால் வகில் சல்மாணி கடையை மூடிவிட்டு சென்றார். பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காவிட்டாலும் போலீசார் தானாக முன்வந்து விசாரித்து வருகின்றனர்.
The post ‘மூலிகை கிரீம் தடவினால் 8 நாளில் அதிசயம்’ வழுக்கை தலையில் முடி முளைப்பதாக மொட்டையடித்த சலூன் கடைக்காரர்: வரிசை கட்டியவர்களுக்கு கொப்புளங்களால் அதிர்ச்சி appeared first on Dinakaran.