திருமலை: ஆந்திராவில் எருமைகள் மீது மோதி சரக்கு ரயில் தடம் புரண்ட சம்பவத்தால், 3 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதித்து பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், பாலயபள்ளி மண்டலத்தில் வெண்டோடு மற்றும் நிதிகில்லு இடையே நேற்று தண்டவாளத்தில் எருமை மாடுகள் தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக திருப்பதியில் இருந்து விஜயவாடா நோக்கிச் சென்ற சரக்கு ரயில், எருமைகள் மீது மோதியது. இதில் எருமைகள் காயங்களுடன் தப்பின. ஆனால் சரக்கு ரயில் தடம் புரண்டது.
இதனால் 3 மணி நேரம் அவ்வழியாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ரயில்வே அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து ஊழியர்கள் மூலம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தடம் புரண்ட சரக்கு ரயிலை மீட்கும் பணிகளை மேற்கொண்டனர். இதையடுத்து ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post ஆந்திராவில் பரபரப்பு; எருமைகள் மீது மோதியதில் தடம் புரண்ட சரக்கு ரயில்: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.