அமேதி: உத்தரபிரதேசத்தில் திருமணத்துக்கு முந்தைய நாளில் மணமகன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோகம் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டம் சலோனை சேர்ந்தவர் ரவி(30). இவருக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு அமேதி மாவட்டம் அசாம்கர் பகுதியில் உள்ள மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. மேலும் திருமண ஊர்வலமும் நடைபெற்றது. ஊர்வலம் கவுரிகஞ்ச் காவல்நிலைய பகுதியை அடைந்தபோது பானி ரயில் நிலையம் அருகே லக்னோ – வாரணாசி ரயில் பாதையில் சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று ஊர்வலத்தில் இருந்து ஓடிய மணமகன் ரவி சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
The post திருமண ஊர்வலத்தில் சென்ற மணமகன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை appeared first on Dinakaran.