கோர்பா: சட்டீஸ்கரில் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் திருடியதாக சந்தேகமடைந்த உரிமையாளர் இரண்டு தொழிலாளர்களின் நகங்களை பிடுங்கி, ஷாக் வைத்து சித்ரவதை செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சட்டீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள காபிரபாத்தி பகுதியில் சோட்டு குர்ஜார் என்பவருக்கு சொந்தமான ஐஸ்கிரீம் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. இந்த தொழிற்சாலையில் ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தை சேர்ந்த அபிஷெக் பாம்பி மற்றும் வினோத் பாம்பி ஆகியோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் இருவரும் தொழிற்சாலையில் திருடியதாக சந்தேகமடைந்த உரிமையாளர் குர்ஜார் மற்றும் அவரது கூட்டாளி முகேஷ் சர்மா, இருவரையும் அரைநிர்வாணமாக நிற்க வைத்து அடித்து உதைத்துள்ளார்.
மேலும் அவர்கள் கையில் இருந்த நகங்களை பிடுங்கியதோடு, அவர்களுக்கு ஷாக் வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்து தப்பிய இருவரும் தங்களது சொந்த கிராமங்களுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர். பின்னர் ராஜஸ்தான் போலீசாரிடம் இது குறித்து புகார் செய்துள்ளனர். இது குறித்துவழக்கு பதிவு செய்த போலீசார் நடவடிக்கைக்காக கோர்பா காவல்துறைக்கு இதனை அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருகின்றது.
The post ஐஸ்கிரீம் ஆலையில் திருடியதாக சந்தேகம்; நகங்களை பிடுங்கி, ஷாக் வைத்து 2 தொழிலாளர்கள் சித்ரவதை: சட்டீஸ்கரில் கொடூரம் appeared first on Dinakaran.