அந்த வாலிபருக்கும், அஞ்சலிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இது ஒரு கட்டத்தில் அஞ்சலியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அந்த வாலிபர் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் அஞ்சலியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த வருடம் அஞ்சலிக்கு துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்ஸ் வேலை கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர் துபாய்க்கு சென்றார். வெளிநாடுக்கு சென்றுவிட்டாலும் அஞ்சலியும், அந்த வாலிபரும் காதலை கைவிடவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் அஞ்சலி விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
இதுகுறித்து அறிந்த வாலிபர், நேற்று முன்தினம் தன்னுடைய உறவினர்களுடன் அஞ்சலியின் வீட்டுக்கு சென்று தனக்கு திருமணம் செய்துவைக்குமாறு பெண் கேட்டுள்ளார். ஆனால் அஞ்சலியை திருமணம் செய்து கொடுக்க சத்யபாலனும், ஸ்ரீஜாவும் மறுப்பு தெரிவித்தனர். இதனால் மனவேதனையடைந்த வாலிபரும், அவரது உறவினர்களும் திரும்பிச் சென்றனர். மகள் தன் பேச்சை கேட்க மறுப்பதால் மனவேதனையடைந்த ஸ்ரீஜா திடீரென வீட்டில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் உடல் முழுவதும் தீ பரவியதில் அலறி துடித்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சத்யபாலன், அஞ்சலி மற்றும் அகிலேஷ் ஆகியோர் சேர்ந்து ஜாவின் உடலில் பற்றிய தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் காப்பாற்ற முயன்ற 3 பேர் உடலில் தீப்பிடித்ததால் அலறி துடித்தனர். இவர்களது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த பக்கத்து வீட்டினர் தீயணைப்பு படைக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 3 பேரின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ஸ்ரீஜா சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தார். படுகாயமடைந்த சத்யபாலன், மகள் அஞ்சலி, மகன் அகிலேஷ் ஆகியோர் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சத்யபாலனும், அஞ்சலியும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். அகிலேஷுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து எருமேலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வேறு சாதியை சேர்ந்த காதலன் பெண் கேட்டு வந்ததால் காதலியின் தாய் தீக்குளித்து பலி: காப்பாற்ற முயன்ற தந்தை, மகள் கருகி சாவு appeared first on Dinakaran.