‘தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்’ வங்கதேச இடைக்கால அரசுக்கு அமெரிக்க எம்பிக்கள் கோரிக்கை: ஷேக் ஹசீனா கட்சி மீதான தடையை அகற்ற அழுத்தம்

நியூயார்க்: வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. இதில் போட்டியிட முன்னாளர் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுக் குழுவின் மூத்த உறுப்பினர் கிரிகோரி மீக்ஸ், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணைக் குழுவின் தலைவர் பில் ஹுயிசெங்கா, மூத்த உறுப்பினர் சிட்னி காம்லாகர்-டோவ் உள்ளிட்டோர் தலைமை ஆலோசகர் முகமது யூனுசுக்கு அனுப்பிய கடிதத்தில், பிப்ரவரியில் நடைபெறும் பொதுத் தேர்தல் தொடர்பாக கடிதம் எழுதி உள்ளனர்.

அதில், இடைக்கால அரசு அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து பணியாற்றுவது மிகவும் முக்கியம். அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை இடைநிறுத்தினால் அல்லது குறைபாடுள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை மீண்டும் தொடங்கினால், இது சாத்தியமாகாது என கவலை தெரிவித்துள்ள அமெரிக்க எம்பிக்கள் பழிவாங்கும் சுழற்சியை தொடராமல் வங்கதேச ஜனநாயகத்தின் மதிப்புகளை பிரதிபலிக்க வேண்டுமென கூறி உள்ளனர்.
தற்போதுள்ள இடைக்கால அரசோ அல்லது தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசோ, எந்தவொரு அரசியல் கட்சியின் செயல்பாடுகளையும் நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யும் என நம்புவதாகவும் அமெரிக்க எம்பிக்கள் கூறி உள்ளனர்.

Related Stories: