ஜம்மு ராணுவ முகாமில் துப்பாக்கி சூடு: ராணுவ அதிகாரி பலி

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் ராணுவ முகாம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ராணுவ முகாமுக்குள் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இதில் ராணுவத்தின் இளநிலை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து ராணுவ முகாமின் பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் கூறுகையில், “சம்பாவில் உள்ள ராணுவ பிரிவின் ஜேசிஓ ஒருவர் ஜம்முவில் பணியில் இருந்தபோது துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்ததில் துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார். இதில் பயங்கரவாத தாக்குதல் எதுவும் இல்லை. இருப்பினும் விசாரணைக்கு பிறகு மேலும் விவரங்கள் தெரிய வரும்” என்றார்.

Related Stories: