திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் பல்சர் சுனில்குமார், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ், சலீம் மற்றும் பிரதீப் ஆகிய 6 பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சதித்திட்டம் தீட்டியது மற்றும் ஆவணங்களை அழித்தது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நடிகர் திலீப் உள்பட 4 பேர் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி 4 பேரையும் நீதிமன்றம் விடுவித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் சிறையில் உள்ள மார்ட்டின் ஆண்டனி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பது: நடிகை பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் வாகனத்தில் நான் ஏறவில்லை. சதித்திட்டத்தில் பங்கு சேர்ந்ததாகத்தான் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் என்னையும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும். இவ்வாறு மார்ட்டின் ஆண்டனி தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகை பலாத்கார வழக்கு திலீப்பை விடுவித்தது போல் என்னையும் விடுதலை செய்ய வேண்டும்: சிறையில் உள்ள குற்றவாளி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு
- திலீப்
- கேரள உயர் நீதிமன்றம்
- திருவனந்தபுரம்
- பல்சர் சுனில் குமார்
- மார்ட்டின் ஆண்டனி
- மணிகண்டன்
- விஜீஷ்
- சலீம்
- பிரதீப்
