திருவனந்தபுரம்: கேரள மாநில மலப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். கேரள மாநில மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல், வேங்கரா, செம்மாடு, சி.கே.நகர், செருமுக்கு, ஆமப்பாறை, அம்பலவட்டம், கூரியாடு உள்பட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11.20 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. அப்போது தூங்கிக்கொண்டிருந்தவர்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடினர். ஏராளமான வீடுகளில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இடி முழக்கம் போல சத்தம் கேட்டதாக அந்த பகுதி மக்கள் கூறினர்.
கேரளாவில் நள்ளிரவில் நில அதிர்வு
- கேரளா
- திருவனந்தபுரம்
- மலப்புரம் மாவட்டம்
- கொட்டக்கல்
- வெங்கரா
- செம்மடு
- சி.கே. நகர்
- சேரும்கு
- அமபரை
- அம்பலவட்டம்
- கூறியாடு
