பின்னர் களம் இறங்கிய கேகேஆர் 10.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுனில் நரேன் 18 பந்தில், 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 44, டிகாக் 23 ரன் விளாச, நாட்அவுட்டாக கேப்டன் ரகானே 20, ரிங்குசிங் 15 ரன் எடுத்தனர். சுனில் நரேன் ஆட்டநாயகன் விருது பெற்றார். 6 போட்டியில் கேகேஆருக்கு இது 3வது வெற்றியாகும். சென்னை தொடர்ச்சியாக 5வது தோல்வியை சந்தித்தது. இதனால் பிளே ஆப் சுற்று வாய்ப்பு மங்கியது. எஞ்சிய 8 போட்டியிலும் வென்றால்தான் வாய்ப்பு கிடைக்கும்.
வெற்றிக்கு பின் கேகேஆர் கேப்டன் ரகானே கூறுகையில், “எங்களிடம் திட்டங்கள் இருந்தன. அது நன்றாக வேலை செய்தது. மொயின்அலி சிஎஸ்கேவுக்காக இங்கு ஆடி உள்ளதால் நிலைமைகளை நன்கு அறிவார். இங்கு 170-180 ரன் எடுக்க முடியும் என நினைத்தேன். வருண், சுனில் மிடில் ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தினர். வைபவ், ஹர்ஷித் அவர்களின் திட்டங்களை செயல்படுத்திய விதத்தில் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்’’ என்றார். தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் டோனி கூறுகையில், “கடந்த சில நாட்களாகவே எங்களுக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை. இன்னும் ஆழமாக என்னவெல்லாம் தவறாக செல்கிறது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். நிறைய சவால்கள் இருக்கிறது. ஆனால், அதையெல்லாம் சமாளித்துதான் ஆக வேண்டும்.
நாங்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. பார்ட்னர் ஷிப்களே அமையவில்லை. பவர்பிளேவில், நாங்கள் சில போட்டிகளில் நன்றாக ஆடியிருக்கிறோம். எங்களுடைய அணுகு முறையை வேறு அணிகளோடு ஒப்பிட வேண்டாம். எங்களுடைய பலம் என்னவோ அதற்கேற்ப ஆடினால் போதும். அணியில் சிறப்பான ஓபனர்கள் உள்ளனர். அவர்கள் எல்லா பந்துளையும் சிக்சர் அடிக்கக்கூடியவர்கள் அல்ல.
ஆனால், அவர்கள் திறன் வாய்ந்த தரமான பேட்டர்கள். ஸ்கோர் போர்டை பார்த்து அழுத்தம் ஏற்றிக்கொள்ளாமல் சீரான இடைவெளியில் பவுண்டரிகளை அடித்தாலே நமக்கு தேவையான ஸ்கோர் வந்துவிடும். பவர் பிளேவில் 62 ரன்அடிக்க வேண்டும் என்று நினைத்து ஆடக்கூடாது. பவர் பிளேவில் விக்கெட்டுகளை அதிக அளவு இழந்துவிட்டால் பின்னர் நடு வரிசை வீரர்களுக்கு அது கடினமாக மாறிவிடும். இதன் மூலம் பின்வரிசை வீரர்களால் பெரிய ஷாட்டுகளை ஆட முடியாது” என்றார்.
The post வரலாற்றில் முதன்முறையாக தொடர்ச்சியாக 5வது தோல்வி; எங்கள் அணுகுமுறையை வேறு அணிகளோடு ஒப்பிட வேண்டாம்: சிஎஸ்கே புதிய கேப்டன் டோனி சொல்கிறார் appeared first on Dinakaran.