இதில் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தங்களது ஆஸ்தான கிரிக்கெட் அணி விளையாடும்போது கிரிக்கெட் ஆர்வலர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக புகார் தொடர்ந்து இருந்து வருகிறது. வெற்றிபெறும் அணி, அதிக ஸ்கோர் அடிக்கும் வீரர், விக்கெட் எடுக்கும் வீரர் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த சூதாட்டம் நடக்கிறது. இந்நிலையில், கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸ் கமிஷனரின் கீழ் இயங்கும் மாநகர தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நேற்று இரவு அந்த ஓட்டலுக்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு ஒரு அறையில், சில வாலிபர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு சென்னை-கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியை மையப்படுத்தி இந்த சூதாட்டம் நடைபெற்றது. இதில் அவர்கள் கும்பலாக அமர்ந்து லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாடியுள்ளனர். இதனையடுத்து போலீசார் மெகா கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜேஷ், சவுந்தர், அருண்குமார், நந்தகுமார், விபுல், ஜிபேந்திரா, விபின் ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.10 கோடி ரொக்கப்பணம், 12 செல்போன், 2 கார், 2 பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
The post கோவையில் மெகா கிரிக்கெட் சூதாட்டம் ரூ.1.10 கோடி, கார் பறிமுதல்; 7 பேர் கைது appeared first on Dinakaran.