அதேநேரம், அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளான கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரிகள் ஆகியவற்றில் தொழில் நிறுவன கோட்டா அடிப்படையிலும் சேர்க்கை நடைபெறும். ஒரு தொழில் நிறுவனம் ஒரு மாணவரை, நாங்கள் படிக்க வைத்து, நாங்களே வேலைக்கு எடுத்துக் கொள்கிறோம் என ஸ்பான்சர்ஷிப் செய்யும் நிலையில் சேர்க்கை வழங்கப்படும்.
இதற்கென்று தனியாக ஒவ்வொரு பாடப்பிரிவிலும், 5% இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில், தொழில்நிறுவன கோட்டாவின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. பி.இ., பி.டெக்., பி.பிளான் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் ஏப்ரல் 4 முதல் ஜூன் 9 வரை https://cfa.annauniv.edu/cfa/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
The post அண்ணா பல்கலை. தொழில் நிறுவன கோட்டாவில் மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.