தற்காப்பு கலை படிக்க வந்த சிறுவனிடம் அத்துமீறல்: குங்பூ ஆசிரியர் கைது

 

திருவனந்தபுரம், ஏப். 11: கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே தற்காப்பு கலையான குங்பூ படிக்க வந்த 16 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியை சேர்ந்தவர் சாம் ஜான் (45). அந்த பகுதியில் குங்பூ பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். அவரிடம் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் உள்பட ஏராளமான குங்பூ படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சாம் ஜான் தன்னிடம் படிக்க வந்த 16 வயது மாணவனை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து மாணவன் பெற்றோரிடம் கூறினார். தொடர்ந்து இலவும்திட்டா போலீசில் சிறுவனின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து குங்பூ ஆசிரியர் சாம் ஜானை கைது செய்தனர்.

 

The post தற்காப்பு கலை படிக்க வந்த சிறுவனிடம் அத்துமீறல்: குங்பூ ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Related Stories: