இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 20 ஆண்டு காலம் அதிமுகவில் முழு அளவில் உண்மையுடன் உழைத்து வந்தேன். தற்போது எனது தனிப்பட்ட பணி காரணமாக தொடர்ந்து கட்சிப்பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியாத சூழல் இருக்கிறது. எனவே கட்சியின் அனைத்துவித பொறுப்புகளில் இருந்தும் என்னை முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன்.
கட்சியில் எனக்கு வாய்ப்பு அளித்த அங்கீகாரம் மற்றும் ஆதரவு வழங்கி திறம்பட பணியாற்ற ஊக்கம் தந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு நன்றியை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை ஆண்டு காலம் என்னுடன் பணிபுரிந்த கழகத்தின் நிர்வாகிகள், மூத்தவர்கள் மற்றும் கோவையில் எனது தோளோடு தோள் நின்று துடிப்புடன் பணியாற்றிய கட்சியின் தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து திடீரென விலகிய சந்திரசேகர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளர். வேலுமணி எம்எல்ஏ ஆவதற்கு முன்னர், இவர் தனது வீட்டை அடமானம் வைத்து, அதில் வந்த பணத்தை வேலுமணிக்கு செலவுக்கு கொடுத்ததால் அவர் வெற்றி பெற்று அமைச்சரானதும், தன்னுடன் வைத்துக் கொண்டார். அவ்வளவு நெருக்கமாக இருந்தவர், தற்போது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post வேலுமணியின் தீவிர ஆதரவாளர் அதிமுகவில் இருந்து விலகல் appeared first on Dinakaran.