பங்குனி மாதம் வந்தா மயிலாப்பூர் முழுக்கவே ஒரு சந்தோஷம் பரவுவதை உணரலாம். கோவிலின் மணி ஓசை, பூ வாசனை, மக்களின் முகத்தில் உள்ள மகிழ்ச்சி, எல்லாமே ஒரு நல்ல ஃபீலிங்கை தரும்.
பத்து நாட்கள் நீடிக்கும் பங்குனி திருவிழாவில், தேரோட்டம், இசை , மக்கள் கூட்டம், எல்லாமே சேர்ந்து ஒரு மனம் நிறைந்த அனுபவமா இருக்கும். அந்த அனுபவத்தில், நித்ய அமிர்தம் செய்த அந்த சின்ன உதவி கூட, ஒரு நல்ல நினைவாக மனசில் பதிஞ்சுடுச்சு.
இந்த வருட மயிலாப்பூர் பங்குனி தேரோட்டம் நடந்த நாளில், தேர் வடக்கு மாட வீதியில் நித்ய அமிர்தத்திற்கு அருகே நின்றது. வெயிலில் நின்ற பக்தர்களுக்காக, நித்ய அமிர்தம் இலவசமாக மோரும், விற்பனைக்காக சர்பத்தும் , அணிவதற்கு தொப்பிகளும் கொடுத்தது.
ஒரு கப்பில் மோர், ஒரு தொப்பி வெயிலில் நின்றவர்களுக்கு இது சின்னதா இருந்தாலும், அந்த சமயத்தில் பெரிய மகிழ்ச்சியா இருந்தது. தேரை இழுத்து சோர்ந்த மக்கள் பந்தலுக்கு வந்து ஓய்வெடுத்து, புன்னகையோட போனாங்க. இந்த பங்களிப்பு , விழாவில் ஒரு நல்ல தருணமா மாறியது.
சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர் — 13 மேற்பட்ட கிளைகளை கொண்ட சென்னையின் பிரபலமான நித்ய அமிர்தம்.
The post பங்குனியில் நித்ய அமிர்தம் appeared first on Dinakaran.