தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மாதம் 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலத்துறை ஆகிய மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து இன்று (வியாழன்) மகாவீர் ஜெயந்தி மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 5 நாட்கள் சட்டப்பேரவைக்கு தொடர் விடுமுறையாகும். மீண்டும் 15ம் தேதி (செவ்வாய்) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும். அன்றையதினம் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். விவாதத்துக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதில் அளித்து பேசுவார்.
The post சட்டப்பேரவைக்கு 5 நாள் விடுமுறை appeared first on Dinakaran.