ஊட்டி அருகே தேயிலை தோட்டத்தில் காயத்துடன் இருந்த புலி உயிரிழப்பு!!

ஊட்டி: உதகை அருகே தேயிலை தோட்டத்திற்குள் காயத்துடன் படுத்திருந்த புலி உயிரிழந்துள்ளது. இந்த புலி இறந்து இருக்கக்கூடிய இடம் என்பது உதகை அருகே போதியான பகுதியை ஒட்டித்தான் புலி மிக சோர்வுடன் நடக்க முடியாமல் இருந்தது. அதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பெயரில் அங்கு சென்ற வனத்துறையினர் புலி மிகவும் நடக்க முடியாமல் சோர்வுடன் இருந்தது என முதல் கட்டமாக தெரிவித்தனர்.

புலி உடல்நிலையில் எதாவது பாதிப்பு ஏற்பட்டதா அல்லது மற்றவொரு புளியுடன் சண்டையிட்டதனால் காயங்கள் ஏற்பட்டதா என்று முதல் கட்டமாக விசாரணை நடத்தியதில் கடந்த 31ஆம் தேதி வனப்பகுதியில் இரண்டு புலிகள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்த புலிக்கு பலத்த காயங்கள் ஏற்பத்திருக்கிறது. புலி இடது காலில் பலத்த காயங்களும், அதை போல் கண்பார்வையும் இழந்து இருக்கிறது. இதன் காரணமாக தான் தேயிலை தோட்டத்தில் இரண்டு நாட்களாக அந்த புலி படுத்திருந்தது.

அதனைஅடுத்து 25க்கு மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் கண்காணித்த நிலையில், புலியின் அருகே செல்ல முடியாது என்பதினால் உடனடியாக டிரோன் கேமரா மூலம் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், அந்த புலிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே அதற்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான அனுமதி என்பது உயர் அதிகாரிகளிடம் கிடைக்காததனால். இந்த புலி கடந்த 5 நாட்களாக உணவு, தண்ணீரின்றி தவித்திருந்த நிலையில் இன்று காலை உடல் நிலை மிகவும் மோசமாக காணப்பட்டது.

இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு அந்த புலியை டிரோன் கேமரா மூலம் பார்த்தபோது புலி உடல் அசைவின்றி இருப்பதை பார்த்த வனத்துறையினர் சந்தேகத்தின் பெயரில் அருகில் சென்ற பார்த்தபோது புலி இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்னும் சற்றுநேரத்தில் உடல் பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இறந்தது ஆண் புலிய, அதற்கு எவளோ வயது என்பது அந்த உடற்கூர்வு ஆய்வுக்கு பின் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: