பொள்ளாச்சி வழக்கு: காவல் ஆய்வாளர் ஆஜராக கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர், அரசு மருத்துவர் ஆஜராக கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வரும் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வீடியோ காலில் ஆஜர் ஆகினர். எதிர்தரப்பில் 2 சாட்சிகளை விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பொள்ளாச்சி பாலியல் வழக்குடன் தொடர்புடைய அடிதடி வழக்கின் ஆவணங்களை தாக்கல் செய்ய ஆணையிட்டு. 2 பேரும் ஏப்ரல். 15ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு கோவை மகிளா நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது .

The post பொள்ளாச்சி வழக்கு: காவல் ஆய்வாளர் ஆஜராக கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: