டெல்லி: 2ம் உலகப் போரின் 80ஆம் ஆண்டு வெற்றி கொண்டாட்ட தினத்தில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. 2ம் உலகப் போரின் 80ஆம் ஆண்டு வெற்றி கொண்டாட்ட தின அணிவகுப்பு ரஷ்யாவில் மே 9ம் தேதி நடைபெறுகிறது. அழைப்புக் கடிதத்தை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.