ஆண்டிபட்டி, ஏப்.9: ஆண்டிபட்டி அருகே அரப்படிதேவன்பட்டி பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் கிருஷ்ணமோகன் தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மறித்து சோதனை செய்தபோது, சுமார் 1.25 யூனிட் அளவுள்ள எம்-சண்ட் மண் அரசு அனுமதி இல்லாமல் கொண்டு வந்தது தெரிய வந்தது. சோதனையின் போது டிராக்டர் டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் கிருஷ்ணமோகன் க.விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து டிரைவரை தேடி வருகின்றனர்.
The post அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் appeared first on Dinakaran.