பலாக்காய் சீசன் துவங்கியது காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

பந்தலூர் : பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் பலா மரங்கள் காய்க்க துவங்கியுள்ளதால் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர், வயநாடு பகுதிகளில் சிறு குறு விவசாயிகள் தேயிலை, காப்பி, வாழை, இஞ்சி, பாக்கு உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர். விவசாய பயிர்களுக்கு இடையே பலா மரங்கள் ஏராளமாக வளர்த்து வருகின்றனர்.

மேலும் குடியிருப்பு பகுதிகளை ஒட்டியும் பலா மரங்களை நடவு செய்து வருகின்றனர். இந்த மரங்களில் தற்போது பலாக்காய்கள் காய்க்க துவங்கியுள்ளது. பலா பழங்களையும் விரும்பி மக்கள் விரும்பி உண்டு வருகின்றனர். பந்தலூர் பகுதியில் விளையும் பலா பழங்களை கேரளா மற்றும் சமவெளி பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காட்டு யானைகள் பலா காய்கள் மற்றும் பலா பழங்களை விரும்பி உண்டு வரும் நிலையில் தற்போது பலா காய்கள் காய்க்க துவங்கியுள்ளதால் காட்டு யானைகள் நடமாட்டம் பந்தலூர் பகுதியில் அதிகரித்து வருகிறது.

குடியிருப்பு பகுதிகளில் உள்ள பலா காய்களை உண்ண வரும் காட்டு யானைகளால் மனித-வன விலங்குகள் மோதல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

The post பலாக்காய் சீசன் துவங்கியது காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: