அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு; ஞானசேகரனை விடுவிக்கக் கூடாது: சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது என்று தமிழக அரசு போக்சோ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரனுக்கு எதிராக மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானசேகரன் நேரில் ஆஜர்படுத்தபட்டார். அப்போது, வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அனைத்து முகாந்திரங்களும் உள்ளது. இவர் தான் குற்றம் புரிந்து உள்ளார் என்பதற்கு அனைத்து ஆதாரங்களும் உள்ளதால் ஞானசேகரனை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது.இதையடுத்து, விடுவிக்க கோரிய மனு மீது ஞானசேகரன் தரப்பு வாதிடுவதற்காக இன்று வாதம் தொடர்கிறது.

The post அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு; ஞானசேகரனை விடுவிக்கக் கூடாது: சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் appeared first on Dinakaran.

Related Stories: