நாகர்கோவில்: நாகர்கோவில்- திருவனந்தபுரம் இரட்டை ரயில்பாதை பணிகள் நடந்து வருகிறது. இதற்காக நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையமும் விரிவாக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே நெல்லை செல்லும் பாதையில் உள்ள குளத்தின் மேல் பகுதி வழியாக தண்டவாளம் செல்கிறது. பழைய தண்டவாளத்தின் கீழ் காங்கிரீட் குழாய் அமைக்கும் பணி நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்தது. பொக்லைன் இயந்திரம் கொண்டு மண் ேதாண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென மண் சரிந்து, சென்னை பெரம்பூரை சேர்ந்த ஜானகி ரமேஷ்(47), பாளையங்கோட்டையை சேர்ந்த சிங்கம் மகாராஜன்(39), மேலூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன்(31) ஆகியோர் மீது விழுந்தது.
மற்ற தொழிலாளர்கள் உடனடியாக அவர்களை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக மீட்கப்பட்டதால் மூவரும் உயிர் தப்பினர். மண் சரிந்ததால், காங்கிரீட் குழாய் அமைக்காமல், தோண்டப்பட்ட பள்ளம் மீண்டும் மூடப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை 6.30 மணிக்கு அந்த பாதையில் ரயில்கள் போக்குவரத்து தொடங்கியது. மண் சரிவால் கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் உள்ளிட்ட ரயில்கள் 4 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக வந்தன.
The post நாகர்கோவில் அருகே தண்டவாள பணியில் மண் சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர் படுகாயம் appeared first on Dinakaran.