ஆம்னி பஸ்சில் திடீர் தீ: 35 பயணிகள் தப்பினர்

திருமங்கலம்: பெங்களூருவிலிருந்து நெல்லைக்கு நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சை நெல்லையை சேர்ந்த டிரைவர் சுப்புராஜ்(35) ஓட்டிச் சென்றார். கண்டக்டராக மனோஜ்(25) பணியில் இருந்தார். மொத்தம் 45 பயணிகளுடன் புறப்பட்ட அந்த பஸ்சில், மதுரையில் 10 பயணிகள் இறங்கியதால் 35 பேருடன் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 5.45 மணியளவில் மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே நல்லமநாயக்கன்பட்டி விலக்கு என்ற இடத்தில் மதுரை – கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் சென்றபோது பஸ்சின் முன்புற சக்கரத்தின் அடிப்பகுதியில் தீப்பிடித்தது.

இதன் எதிரொலியாக பஸ்சிற்குள் புகை வந்ததை கவனித்த டிரைவர், பஸ்சை உடனடியாக நிறுத்த முயன்றார். அப்போது கட்டுப்பாட்டினை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது. பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடினர். சக்கரத்தின் அருகே பற்றிய தீ பஸ்சின் முன்பகுதி முழுவதும் மளமளவென பரவத்தொடங்கியது. தகவலறிந்து கள்ளிக்குடி தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். பயணிகள் விரைவாக வெளியேறியதால் யாருக்கும் காயங்கள் இல்லை. பின்னர் அவர்களுக்கு மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post ஆம்னி பஸ்சில் திடீர் தீ: 35 பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: