இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகையிடம் கார் டிரைவராக பணிபுரிந்த பல்சர் சுனில் என்பவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் நடிகையை பலாத்காரம் செய்ய சதித்திட்டம் தீட்டியது முன்னணி மலையாள நடிகரான திலீப் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.
இந்த வழக்கு எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் சமீபத்தில் ஒரு மலையாள தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நடிகையை பலாத்காரம் செய்வதற்கு நடிகர் திலீப் ஒன்றரை கோடி ரூபாய் தருவதாக கூறியிருந்தார் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே நடிகை பலாத்கார வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கக் கோரி நடிகர் திலீப் கடந்த சில வருடங்களுக்கு முன் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தில் இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை நீட்டிக்கொண்டு செல்வதற்காகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
The post நடிகை பலாத்கார வழக்கு சிபிஐ விசாரணை கோரி நடிகர் திலீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி appeared first on Dinakaran.