பின்னர், அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷண் களமிறங்கினார். இந்த ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்துக் கொண்டிருந்த சமயத்தில், 5வது ஓவரை வீசிய சிராஜ் பந்தில், தெவாதியாவிடம் கேட்ச் தந்து அபிஷேக் சர்மா (18 ரன்) வெளியேறினார். அதனால், இஷானுடன் நிதிஷ் குமார் ரெட்டி இணை சேர்ந்தார். இவர்களும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்த தவறினர். இஷான் கிஷண், 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் இஷாந்த் சர்மாவிடம் கேட்ச் தந்து அவுட்டானார்.
அதனால், 50 ரன் எடுப்பதற்குள் சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின், களமிறங்கிய ஹென்றிச் கிளாசன் அதிரடியாக ஆடி ரன்களை உயர்த்தினார். நிதிஷ் – கிளாசன் இணை, 50 ரன்களை சேர்த்திருந்த நிலையில், சாய் கிஷோர் வீசிய பந்தில் கிளாசன் (19 பந்து, 27 ரன்), கிளீன் போல்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, 5வது விக்கெட்டாக, சாய் கிஷோர் வீசிய பந்தில் ரஷித் கானிடம் கேட்ச் தந்து நிதிஷ் குமார் (34 பந்து, 31 ரன்) அவுட்டானார்.
அதையடுத்து, கமிந்து மெண்டிஸ், அனிகேத் வர்மா இணை சேர்ந்தனர். ஆனால், பிரசித் கிருஷ்ணா வீசிய அடுத்த ஓவரில் சாய் சுதர்சனிடம் கேட்ச் தந்து, கமிந்து மெண்டிஸ் (1 ரன்) வெளியேற, சன்ரைசர்ஸ் அணி தத்தளித்தது. பின்னர், கேப்டன் பேட் கம்மின்ஸ் களமிறங்கினார். 19வது ஓவரை சிராஜ் வீசினார். அதில், 4வது பந்தை எதிர்கொண்ட அனிகேட் வர்மா தடுத்து ஆடி, எல்பிடபிள்யு முறையில் அவுட்டானார். அப்போது, டிராவிஸ் ஹெட்டிற்கு பதில், இம்பாக்ட் மாற்று வீரராக சிமர்ஜீத் சிங் அனுப்பப்பட்டார். அவரும், அதே ஓவரின் கடைசி பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.
இஷாந்த் சர்மா வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்ட பேட் கம்மின்ஸ், முதல் பந்தில் பவுண்டரியும், அடுத்த பந்தில் சிக்சரும் விளாசினார். 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. பேட் கம்மின்ஸ் 22, முகம்மது ஷமி 6 ரன்னுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். குஜராத் தரப்பில் முகம்மது சிராஜ் 4 ஓவர் வீசி 17 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
The post சன்ரைசர்ஸ்க்கு எதிரான போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணி வெற்றி appeared first on Dinakaran.