மதுரை, ஏப். 5:மதுரை மருதுபாண்டியர் குறுக்குத்தெரு, முத்துவழிவிட்டான் காம்பவுண்ட் பகுதியில் வசிக்கும் பாண்டியன் மகன் சதீஸ். இவர் வாடகை கார் ஓட்டும் வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த சகோதரி மீனாவின் மகள் பிரியா. இவருக்கும் வினோத்குமார் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் வினோத்குமாரின் தாயார் வேலம்மாள் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.40 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். அந்த பணத்தை தனக்கு கடனாக தரும்படி சதீஷ் கேட்டுள்ளார்.
அப்போது பணம் கொடுக்க மறுத்த எதிர்தரப்பினர் சதீஸை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து அக்கா மீனா அவரது கணவர் பாலகிருஷ்ணன் மற்றும் மோகனசுதன் உள்ளிட்ட சிலர் தன்னை அடித்து காயப்படுத்தியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக செல்லூர் போலீசில் சதீஸ் புகார் செய்தார். இதேபோல பாலகிருஷ்ணனும் போலீசில் சதீஸ் மீது புகார் அளித்தார். இருவரது புகாரின் பேரில் பாலகிருஷ்ணன், மீனா, மோகனசுதன், சதீஸ், சரவணன், வீரபாண்டி ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post தகராறில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.
