கூடலூர், ஏப்.4: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கூடலூர், பந்தலூர் வட்டக்கிளைகள் சார்பில் நேற்று கூடலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு பதவி உயர்வு, மற்றும் பணியானை கோப்புகளை உரிய காலத்தில் ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு சென்ற அரசு ஊழியர் சங்க மாநில தலைவர்களை அநாகரிகமாக நடந்து கொண்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் போஜன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சலீம், மாவட்ட செயலாளர் சிவபெருமாள், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க வட்டக்கிளை செயலாளர் விஸ்ணு தாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாடடத்தில் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் வட்டக்கிளை பொருளாளர் ஜெயகாந்தன் நன்றி கூறினார்.
The post கூடலூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.